அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

Date:

 –அபூ அய்மன்

மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில் உலகளாவியரீதியல் அரங்கேற்றப்படும் அவலங்கள் அல்லது இனரீதியான வன்முறை என்று கூட குறிப்பிட முடியும்.

அல் குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறது, அதன் சில ஆயாக்களில் அல்லது மொழி மாற்றத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளடங்குகிறது எனும் கருத்தாடல் மேற்கத்தைய உந்துதலில் கடந்த பல தசாப்தங்களாக ஊடுருவப்பட்ட அப்பட்டமான பொய்.

துர்பாக்கியவசமாக இன்றைய இலங்கை முஸ்லிம்களும் அறியாமை மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக இந்த மாயையில் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர்.

 சாதிக் ஹாஜியின் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இலவசமாகப் பகிர்ந்தளிப்பதற்காக சவுதி அரேபியா பிரஜையான அஷ்ஷேக் முஹம்மது சாதிஹான் அவர்களினால் 51,560 அல்குர்ஆன் பிரதிகள்  இலங்கை அரசாங்கத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த அன்பளிப்பை ஜித்தாவில் அமைந்திருக்கும் இலங்கைக்கான கொன்சல் ஜெனரல் திணைக்களம் ஏற்று அங்கீகரித்துள்ளது.

முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்துடனான தொடச்சியான தொடர்பாடல்கள் மற்றும் வழகாட்டல்களுடன் குறித்த புனித அல் குர்ஆன் பிரதிகள் இலங்கையை வந்தடைந்தன. இவற்றில் அறபு மொழியில் 25,000 பிரதிகளும், தமிழ் மொழிபெயர்புடனான அறபு மொழியிலான 15,640 பிரதிகளும், மூன்று ஜுஸ்உகளை உள்ளடக்கிய தமிழ் (9,720) மற்றும் சிங்கள (1200) மொழிபெயர்ப்புடனான புனித அல் குர்ஆன் பிரதிகளும் உள்ளடங்குகின்றன.

 தீவிரவாதம் இன்றேல் விடுவிக்கலாம்

இவற்றில் பெரும்பான்மை இலங்கை முஸ்லிம்களால் எளிதாக வாசித்து விளங்கமுடியாத 25,000 அறபு பிரதிகளே தீவிரவாதக் கருத்துக்களற்றவையென அரசினால் நியமிக்கப்பட்ட உலமாக்களின் மீளாய்வுக் குழு பாதுகாப்புப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளமையால் அவை மாத்திரம் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படுவதையிட்டு தமது எதிர்புகள் எதுவுமில்லை என தேசிய புலனாய்வுத் துறை பிரதானி மேஜர் ஜெனரல் குலதுங்க 2024.08.05 ஆம் திகதியிடப்பட்ட தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புனித அல்குர்ஆன் என்றும் எப்போதும் தீவிரவாதத்தை போதிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோவில்லை என்பது உலகலாவிய உலமாக்களின் ஏகோபித்த கருத்து. இருப்பினும் இலங்கை உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழுவின் படி, ஸுரா தவ்பாவை (09) அறபியில் கருத்தறியாது ஓதினால் அதில் தீவிரவாமில்லை மாறாக அதனை தமிழில் கருத்தறிந்து அடிக்குறிப்பின்றி வாசித்தால் அது தீவிரவாதம் அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.

இவர்களது நிலைப்பாட்டின் படி, புனித அல்குர்ஆனில் அறபு வசனங்கள் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லையாயினும் அதே திருக்குர்ஆன் வசனங்கள் சவுதி அரசினால் தமிழ் அல்லது சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது அல்லது அடிக்குறிப்பு இடப்படாதவிடத்து அவை தீவிரவாதக் கருத்துக்களை வெளிப்படுத்திநிற்கின்றன என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

 அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒரு புனிதப் பணி

புனித அல் குர்ஆனை அறபு மொழியில் மீள் பிரசுரிக்கவும், ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்து பிரசுரிக்கும் உத்தியோகபூர்வமான உரிமை சவுதி அரேபியா அரசின் “மன்னர் ஃபஹத் அல்-குர்ஆன் பிரசுரிப்பு நிலையம்” கொண்டுள்ளதை உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழும் 200 கோடி முஸ்லிம் மக்கள் மதஹப் வேறுபாடின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் உலகின் அனைத்து நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

உஸ்மானிய கிலாபத் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனிதப் பணிக்கான பதிப்புரிமையும், தனித்துவத்தன்மையும், புனிதத்துவமும் களங்கமின்றி இன்றுவரை பேணிக்காக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், பிரேன்சு, ஜோ்மனி, ரஷ்யா, சீனா, ஸ்பானிய, ஹிந்தி, உருது, சிங்களம், தமிழ், மலேயா, ஜப்பான், மலையாளம், கொரியா, நேபாளம் உள்ளிட்ட ஐம்பதிற்கும் அதிகமான மொழிகளில் இந்த இறை வேதம் மொழிபெயர்க்கப்பட்டு எவ்வித அடிக்குறிப்புக்களோ அல்லது தனிக்கைகளோ இன்றி மக்கள் கைகளை அடைந்துள்ளது.

இத்தப் பின்னணியில், இரு புனிதத் தலங்களின் மேற்பார்வையாளர் சவுதி அரசின் அப்போதைய மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் பணிப்புரையில் இஸ்லாமிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மார்க்கத் தீர்ப்புத் துறையின் பிரதம பிரச்சாரகர் அஷ்ஷேக் முஹம்மது இக்பால் மதனீ அவர்களின் தலைமையில் இந்த தமிழ் மொழிபெயர்ப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்பு நோக்கி சரிபார்க்கும் பணியில் இலங்கையைச் சோ்ந்த தலைசிறந்த உலமாக்களான, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (மறைந்த) பொதுச் செயலாளர்  அஷ்ஷேக் முஹம்மது மக்தூம் அஹ்மது முபாறக் அவர்கள் உள்ளிட்ட, பேராசியர் அஷ்ஷேக் முஸ்தபா மௌலானா, அஷ்ஷேக் அபூபக்கர் அஸ்ஸித்தீக், கபூரிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா முஹம்மது ஸயீது ஆகியோர்  1993 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டமை எமது நாட்டுக்குக் கிடைத்த கௌரவமாகும்.

இந்த புனித அல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் எவ்வித தடைகளுமின்றி விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் தழில் வடிவில்  பல்வேறு வளைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இன்று அனைவரது கையடக்கத் தொலைபேசிகளிலும் இதே மொழிபெயர்ப்புப் பிரதியை வாசிக்கவும் முடியும்.

1992 முதல் இன்றுவரை இந்த புனித தமிழ் மொழிபெயர்ப்புடனான சுமார் இரண்ட இலட்சம் அல் குர்ஆன் பிரதிகள் இலங்கை முஸ்லிம்களின் கைகளை அடைந்துள்ளன. அநேகமான மத்ரஸாக்களிலும் வீடுகளிலும் மன்னர் ஃபஹத் அல்-குர்ஆன் பிரசுரிப்பு நிலையம் பிரசுரித்த தமிழ் மொழிபெயர்ப்புடனனான அல் குர் ஆன் பிரதிகளே கிடைக்கப்பெறுகின்றன.

 யார் அவர்கள்?

மொழி பெயர்க்கப்பட்டு மூன்று தசாப்தகாலமாக உலகலாவியரீதியல் இலவசமாகப் பகிர்தளிக்கப்பட்டு வந்த அல் குர்ஆனில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை நாட்டுக்குள் அனுமதிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கும்  தேசிய இன நல்லிணக்கத்துக்கும் அச்சுறுத்தல் என முன்மொழிந்து இறக்குமதியை நிராகரித்த உலமாக்களை உள்ளடக்கிய மீள்பரிசீலனைக்கு குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

2024.04.25 இடம்பெற்ற மீள்பரிசீலனைக் குழு கூட்டத்தில் குறித்த மொழிபெயர்ப்புப் பிரதிகள் குறித்த குழுவின் நிபந்தனைகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் இறக்குமதி அனுமதி நிராகரிக்கப்பட்டதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள கூட்ட நடப்புக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இந்த மீள்பரிசீலனைக் கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான, அஷ்சேய்க் அர்க்கம் நூராமித், அஷ்சேய்க் (கலாநிதி) ஏ.ஏ.ஏ. அஸ்வர், அஷ்சேய்க் முர்ஷித் முலப்பர், அஷ்சேய்க் முஸ்தபா ரஸா ஆகிய நான்கு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஒப்புதல் வழங்கிதாக ஆதாரங்கள் கிடைப்பப்பெறுகின்றன.

 அடிக்குறிபற்ற மொழிபெயர்ப்பு அடிப்படை உரிமை

இலங்கை அரசியலமைப்பின் 10 ஆம் சரத்து, 12(1) மற்றும் 14(1)உ. எனும் உப பிரிவுகளின் படி சமய உரிமை என்பது அனைத்து பிரஜைகளதும் அடிப்படை உரிமையாகும். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் புனித அல்குர்ஆனை வாசிப்பததையும், வைத்திருப்பதையும், அதனை விளங்கும் வகையில் அடிக்குறிப்புக்களோ அல்லது விளக்கக் குறிப்புக்களோ அற்ற வகையில் அடிப்படை வடிவிலான தமிழ் அல்லது சிங்களப் பிரதியை பெற்றுக்கொள்வது அவர்களது அடிப்படை உரிமையாகும். விளக்கக் குறிப்பிடுவதும், வசன நடையை அணிவகுப்பதும் வெளியீட்டாளர்களின் தொிவாகும்.

இந்த விடயத்தில் குறித்த மீள்பரிசீலணைக் குழுவானது  முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரையறைகளையும் தாண்டி தமது இயக்க மற்றம் மத்ஹப் வேறுபாடுகள் உள்ளிட்ட சுய விரும்பு மற்றும் அபிலாசைகளை முதன்மைப்படுத்த முனைந்தன் விளைவாக சமூகம் இதுவரை அனுபவித்த உரிமைகள் இழக்கப்படும்  அபாயம் உருவாகியுள்ளது என்பதை ஆரம்ப விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.

Gift List 23042024
Letter Consulate General Jeddah 20022024
Ministry of Defence approval for arabic quran 05082024
Review Commitee MeetingMinutes 25042024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...