எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தள்ளது.
குறித்த மாவட்டங்களில் 23 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவுகிறது.
அத்துடன் 25 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த எல் நினோ பாதிப்புக்கு நேரடியாக முகம்கொடுத்து வருகின்றனர்.
இதனால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பிரதேசங்களில் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக 72 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் இடம்பெறுகின்றன.
