திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

Date:

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் இவ்வாறு புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

இதற்கான ஆரம்பகட்ட நிதியுதவியை வழங்க சீன அரசு இணங்கியுள்ளது. இரு கட்டங்களாக திட்டம் முன்னெடுக்கப்படும். முதற்கட்டத்தில் 18 மாதங்களில் 9 பாலங்கள் புனரமைப்பு செய்யப்படும்.

இதற்கான ஒப்பந்தம் போக்குவரத்து அமைச்சிற்கும் சீன அரசாங்கத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த யோசனை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல...

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர்...