வங்காள விரிகுடா கடற்பரப்பில், இலங்கைக்கு வடகிழக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது தாழமுக்கமாக (Depression) வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஆழமான தாழமுக்கமாக (Deep Depression) உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளிமண்டலத் தொகுதி இலங்கைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நோக்கி காற்றோட்டம் காணப்படுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்து காணப்படும்.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிற்கு கனமழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
