ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் ரிபானை ஒரு வருட காலத்திற்கு நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
கட்சியின் இத்தீர்மானம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த அப்துல் வாசித், கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தற்போது ஓட்டமாவடியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஹபீப் ரிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைச் சுழற்சி முறையில் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒருவருக்கு வழங்குவதற்கு கட்சி தீர்மானித்திருந்தது.
முதலாவதாக நியமிக்கப்பட்ட இவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகத் தனது பதவியை இராஜினாமா செய்தார் தற்போது ஏறாவூர் மாநகர சபை மேயராகப் பணியாற்றுகிறார்.
நளீமின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் இராஜினாமா செய்தார்.
தற்போது குறித்த வெற்றிடத்திற்கு ஒரு வருட கால அடிப்படையில் கட்சியின் அடுத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
