ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று (42.31%), இலங்கையின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகத் தேர்வானார்.
தொடர்ந்து, செப்டம்பர் 23 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற அவர், கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமராக நியமித்ததுடன் பாராளுமன்றத்தையும் கலைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்று, 141 தொகுதி இடங்கள் மற்றும் 18 தேசிய பட்டியல் இடங்கள் அடங்கலாக மொத்தம் 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.
இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் வரலாற்றில் கட்சி ஒன்று பெற்ற மிகப்பெரிய பெரும்பான்மை இதுவாகும்.
இரண்டு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், “எங்கள் அரசுக்கு 2 ஆண்டுகள் – நாட்டுக்குச் சுபிட்சம்” எனும் தலைப்பில் நாடு தழுவிய ரீதியில் பிரம்மாண்ட மக்கள் பேரணிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில், அரசின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
நிதி ஒழுக்கம், அரசின் வருவாய் அதிகரிப்பு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலமான வருமான வளர்ச்சி.
வெளிநாட்டுச் செலாவணி வரத்து உயர்வு, சுங்கம் மற்றும் துறைமுகச் செயல்பாடுகளில் சாதனை லாபம்.
சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்துதல், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தல், புதிய சட்டங்களை இயற்றுதல்.வெளிநாட்டு ராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துதல்.
