அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார்: நாமல் ராஜபக்ஸ!

Date:

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதனால், தமது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முடியும் என நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறு செய்யும் பட்சத்தில் தானும் பதவி விலக தயார் என அவர் கூறுகின்றார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னுதாரணமாக செயற்படுமானால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தான் முன்னுதாரணமாக பதவி விலகுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த...

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...