போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா’ எலே குணாவின் பிரதான உதவியாளர் கைது!

Date:

பல  குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் மற்றும் தோழருமான ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (28) பிற்பகல் புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெடிபானா எல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தேகநபரிடம் 13 கிராம் ஹெரோயின், 01 கிராம் ஐஸ், 22 கிராம் கேரள கஞ்சா மற்றும் 160 “PREGA TABLETS” எனும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 150,200 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 15, அளுத் மாவத்தையில் வசிக்கும் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...