A /L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்!

Date:

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செயன்முறை பரீட்சைகளில் தோற்றுவதற்கான திகதி பிற்போடபட்டமையால், பெறுபேறுகளை இறுதி செய்வது தாமதமாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரமளவில் செயன்முறை பரீட்சைகள் நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...