சந்தை விலையை விட குறைவாக யூரியாவை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி திட்டம்!

Date:

50 கிலோகிராம் யூரியா உர மூடையை, தற்போது சந்தையில் உள்ள விலையைவிடவும் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.

எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்காக சமூக – பொருளாதார சூழலை உருவாக்குவதே இதன் எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 3.6 மில்லியன் மெற்றிக்டொன்களும், வருடாந்த வெங்காயத் தேவையில் 50 சதவீதமும், உருளைக்கிழங்குத் தேவையில் 35 சதவீதமும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான கால்நடைகளின் மேம்பாட்டுக்காக, வருடாந்தம் தேவைப்படும் 650,000 மெட்ரிக் தொன் சோளத்தில், 80 சதவீதத்தை இந்த ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளம் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தேவையான 230,000 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தையும், 100,000 மெட்ரிக் தொன் TSP மற்றும் 182,000 மெட்ரிக் தொன் MOPஆகியவற்றை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் வசதிகளுடன் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய உணவு உற்பத்திக்குத் தேவையான உரத்தை தனியார் துறையினர் மூலம் இறக்குமதி செய்வதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய இரசாயன உரம் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி சந்தையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும்...

IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில்,...

200மி.மீ பலத்த மழை: அதிக மழை வீழ்ச்சி கம்பஹாவில்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி...