பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்ட உத்தரவு: புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத்!

Date:

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் , வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அறிவித்துள்ளார்.

மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் புத்தளம் மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறு பாரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலகம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், அதுதொடர்பில் குறித்த மரங்களை அகற்ற தேவையான மதிப்பீட்டு அறிக்கையை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மேலும் கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...