கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்

Date:

தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிய போது காந்தி சாலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...