வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

Date:

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...