அலிசப்ரி ரஹீம் எம்.பியின் வீட்டின் மீது தாக்குதல்!

Date:

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது , பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லம், அவரது அலுவலகம் என்பனவற்றின் மீது இனந்தெரியாத குழுக்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கியது முதல் இன்றுவரை அரசு சார் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...