இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் சபாநாயகர் சந்திப்பு!

Date:

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக அவர் இதன்போது சபாநாயகர் குறிப்பிட்டார்.

அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு
நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொள்ளும் பணிகளை பாராட்டிய அவர் பாரளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கிவரும் பங்களிப்புக்குச் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜூலி சங், இந்நாட்டுக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...