கொழும்பு நகரில் தற்போது அமைதியான சூழல் : பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் கடமையில்!

Date:

நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறிய கொழும்பு நகரில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது.

நாட்டில் ஏனைய பகுதிகளிலும் அமைதி நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கொழும்பு நகரில் இனி எவ்வித குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களும் வீதிகளும் தற்போது வெறிச்சோடியுள்ளன.

அதுமட்டுமல்லாது வழமையாக பரபரப்பாக இயங்கும் கொழும்பு நகரம் அமைதியான சூழ்நிலையில் காணப்படுவதுடன் அலரி மாளிகைக்கு அருகே பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய பயணச் சீட்டுகள் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தமது தொழிலுக்கு செல்ல நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...