சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சஷி வீரவன்சவை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதற்கமைய, சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...