வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

Date:

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன இன்று திங்கட்கிழமை (23) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியை அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேற்று இராஜினாமாச் செய்ததையடுத்து அந்தப்பதவி வெற்றிடத்துக்கு அருணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகாரச் சேவையின் உறுப்பினரான, வெளிவிவகாரச் செயலர் அருணி விஜேவர்தன, 34 வருடங்களாக வெளிவிவகாரச் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளார்
அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்,

அத்துடன் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...