அம்பாறையில் வெறிச்சோடிய வீதிகள்: வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நிரையாக தத்தமது வாகனங்கள் உடன் அதிகாலை முதல் மாலை இரவு என காத்திருந்து எரிபொருளை பெற்றுச்செல்வதுடன் மற்றுமொரு தொகுதியினர் எரிபொருள் தீர்வதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை அவதானிக்க முடிகின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கான எரிபொருட்கள் சுழற்சி முறையில் வழங்கி வருவதுடன் இணைய வழியூடாக மக்கள் அறிந்து குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்தை வந்தடைகின்றனர்.

அத்துடன் குறித்த எரிபொருள் நிலையங்களில் எவ்வித ஒழுங்கமைப்புக்களும் இன்றி மக்கள் அதிகளவாக குவிந்து காணப்படுவதனால் எரிபொருள் விநியோகம் சீரற்ற முறையில் வழங்கப்படுகின்றது. இதனால் சில இடங்களில் பொதுமக்கள் எரிபொருள் ஊழியர்களிடையே முரண்பாடுகள் உருவாகின்றன.மேலும் இதனை தொடர்ந்து இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவ்விடத்தில் இருந்து பொதுமக்கள் அகன்று செல்வதை தினமும் காண முடிகின்றது.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது , நிந்தவூர், சம்மாந்துறை , அக்கரைப்பற்று , மருதமுனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் தீர்ந்துள்ளமையினால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேநேரம் கல்முனை, மருதமுனை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் வாகனங்கள் காத்துக்கொண்டு இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் இவ்வாறான நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளதுடன் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி மக்கள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதை விட எரிபொருள் பற்றாக்குறையினால் அநேகமான இடங்களில் துவிச்சக்கரவண்டி பாவனையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

கல்முனை சம்மாந்துறை சாய்ந்தமருது பகுதியில் எரிபொருள் நிலையங்களில் குழப்பங்களை உருவாக்க முயன்ற நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...