20 வருடங்களில் பின்னர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய இலங்கை!

Date:

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பான ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அணித்தலைவர் பிஞ்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை வெற்றி அடைந்தது.

இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதன்படி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...