Tuesday, November 24, 2026

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணிநேர நீர் வெட்டு!

1 min read

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சனிக்கிழமை இரவு 09.00 மணி முதல் நாளை (31) காலை 8.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 9, 10, 11 மற்றும் 12 ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.