கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 ஆண்டுகள்!

Date:

இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன.

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட அதேவேளை 14 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு எம்1-17 , மூன்று கே-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...