ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Date:

முன்னைய விலைக்கு பாடசாலை பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவற்றை பயன்படுத்தி தற்போது ரயில்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இம் மாதத்தில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புதிய கட்டண அறிவிப்பிற்கு அமைவாக அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, எந்தவொரு சிக்கலுமின்றி வழமைபோன்று ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வழைமை போன்றே இன்றும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...