இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

Date:

நாட்டில் இன்றும் (27) மற்றும் நாளையும் (28) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களிலும், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...