இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...