கிராமிய இளம் சமுகத்திருக்கு ஜப்பான் தொழில்நுட்ப பயிற்சி!

Date:

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளம் சமுகத்திருக்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஜப்பான் தூதுவர் மிசு கொஸி, இதனை தெரிவித்தார்.

அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பொழுது அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜப்பான் தூதுவர் அதற்கு மிக சாதகமான பதிலை வழங்கினார்.

இதன்மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...