ஒளிமயமான நாட்டுக்காக பிரார்த்திப்போம்!

Date:

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும்” பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் இத்தினத்தில் எண்ணெய் வைத்து,நீராடி, புத்தாடை அணிந்து,ஆலய தரிசனம் செய்வதுடன், ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். அத்துடன் பெரியோர்களை வணங்கி,பரிசுப் பொருட்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, உறவினர்களுடன் இனிப்பான சிற்றுண்டிகள் உண்டு, உலகெங்கும் உள்ள இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும், அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவன்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...