வரகாபொல மண்சரிவிலிருந்து இரண்டாவது சடலம் மீட்பு!

Date:

வரகாபொல மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மகனுடைய சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் இந்தப் பெண்ணின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் தற்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...