IPL 2023: இன்று சென்னை – லக்னோ அணிகள் பலப்பரீட்சை!

Date:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன.

அந்த வகையில் லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னை அணி ஏற்கனவே 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் தலைவர் லோகேஷ் ராகுல் தொடையில் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கியிருப்பது நிச்சயம் பின்னடைவாகும். அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:- சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி (தலைவர்), அம்பத்தி ராயுடு, தீக்ஷன அல்லது மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா, ஆகாஷ் சிங்.

லக்னோ: கைல் மேயர்ஸ், மனன் வோரா அல்லது பிரேராக் மன்கட், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா (தலைவர்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கௌதம், அமித் மிஸ்ரா, அவேஷ்கான் அல்லது யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் அல்லது மார்க்வுட்

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...