இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Date:

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘த ஹிந்து’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

‘Shi Yan 6’ எனும் சீன கடல்சார் ஆய்வு கப்பலுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைவதாக ‘த ஹிந்து’ தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், திருகோணமலையில் அமைக்கப்படும் எண்ணெய் தாங்கிகளின் மேம்பாட்டு பணிகளை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் கைச்சாத்திடப்பட்டது. சீன ஆய்வு கப்பலான Shi Yan 6 இலங்கை வருவதற்கு முன்னதாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...