கொழும்பின் பல பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு

Date:

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 8 மணி முதல் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...