கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை இரத்து!

Date:

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், கோதுமைக்காக 6 ரூபா வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இறக்குமதி கட்டுப்பாட்டை மாத்திரமே இதன் மூலம் உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...