சொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க தீர்மானம்

Date:

கொழும்பு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய அண்மையில் வீட்டு வளாக நிர்வாக நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனால் பிரதான நகரங்களில் வீடுகளை வாங்கி தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 123(1) பிரிவின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த எழுத்துமூலக் கோரிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...