ரயில் நிலைய உணவகத்தில் உணவுகள் மீது ஓடி திரியும் எலிகள்!

Date:

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு வைக்கப்பட்டுள்ள அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர் சீலை உடைத்து உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் சுகாதார அதிகாரிகள் வந்து உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்துள்ளனர்.

இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் அனுராதபுரம் புகையிரத நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருகின்றமை தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...