ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய இரு குழுக்கள் நியமிக்கப்படும்

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், அந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் சனல் 4 விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...