அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற புத்தளம் முஹம்மத் ஜனீஸ் செய்னப்!

Date:

(எம்.யூ.எம்.சனூன்)

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட மாணவர் சாகித்திய விழாவில், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடத்தினை புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மத் ஜனீஸ் செய்னப் பெற்றுக்கொண்டுள்ளார்.

“எமது தேசத்தை விழிப்படைய செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கலாச்சார துணை குழுவினரால் 28 வது தடவையாக இந்த போட்டி நடாத்தப்பட்டது.

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் பல்கலைக்கழக பொறியியல் பீட ஈ.ஓ.ஈ. அரங்கில் இடம்பெற்றது.

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் இம்மாணவி நாகவில்லு முஹம்மது ஜனீஸ் மற்றும் பாத்திமா சியாஸ்னா தம்பதிகளின் புதல்வியாவார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...