உயர்தரப் பரீட்சைக்கான புதிய கால அட்டவணை அடுத்த வாரம்: கல்வி அமைச்சர்

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை நடத்துவதற்கான தினத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 9.30 இற்கு ஆரம்பமான நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா அல்லது குறித்த தினத்தில் நடத்துவதா என்பது தொடர்பில் இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவிதிருந்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையினை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான நேர அட்டவணையும் வெளியிடப்பட்டது.

Popular

More like this
Related

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...

விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...