நிலவின் மேற்பரப்பில் கந்தகம்: சந்திரயான்-3 கண்டுபிடிப்பு!

Date:

சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவரில் உள்ள ஏ.பி.எக்ஸ்.எஸ். கருவி கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது கந்தகம் தவிர வேறு சில சிறு கனிமங்களையும் அந்த கருவி கண்டுபிடித்திருப்பதாகவும், கந்தகம் இருப்பதற்கு காரணம் எரிமலையா? எரிகல்லா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையைத் தேடி பிரக்யான் ரோவர் சுற்றி வலம் வந்த காட்சியை விக்ரம் லேண்டரின் கேமரா படம் பிடித்துள்ள நிலையில் குறித்த காட்சியை பகிர்ந்துள்ள இஸ்ரோ, சந்திரனில் குழந்தை விளையாடுவதை தாய் பாசத்துடன் வேடிக்கை பார்ப்பது போல அக்காட்சி அமைந்திருப்பதாக வர்ணித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...