உலகளவில் 840 மில்லியன் பெண்கள் பாலின ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி
உலகளவில் 840 மில்லியன் பெண்கள் பாலின ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாலின ரீதியான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றிய போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பாலின ரீதியான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, இந்த வன்முறைகளை ஒழிப்பதற்கு உடனடியான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கை கைச்சாத்திட்டுள்ள பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை (ratify) வழங்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சுட்டிக்காட்டினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செம்மஞ்சள் (Orange) நிற ஆடைகளை அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தனர்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.