Wednesday, November 25, 2026

நாட்டின் காற்றின் தரம் வழமை நிலைக்கு

1 min read

வளியின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட காரணமாகவிருந்த இந்தியாவின் நச்சுவாயு பரவலானது வடகிழக்கு திசை சோக்கிய காற்றோட்டத்துடன் நாட்டை விட்டு அகன்றுச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

200 AQI க்கு அண்மித்திருந்த வாயு தரம் இன்று 50 AQI ஆக குறைவடைந்துள்ளது. இதற்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு வரும் நாட்டின் காற்று குறிகாட்டிக்கமைய வளியில் காணப்படும் காற்றின் தரம் சுகாதாரமானது என கவனத்திற்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய அபாயமானது குறிப்பிடத்தக்களவு குறைந்த மட்டத்தை அடைந்துள்ளது.

எவ்வாறெனினும் கொழும்பு மாவட்டத்தின் பத்தரமுல்லை பகுதியில் வளி மாசடைவானது 92 AQI மட்டத்தில் உள்ளது. அத்துடன் பதுளை, எல்ல பகுதியில் வளி மாசடைவு குறிப்பிட்டளவில் உயர் மட்டத்தில் உள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.