இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர் ‘பெர்சி அபேசேகர’ காலமானார்!

Date:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மூத்த ஆதரவாளரான  பெர்சி அபேசேகர (87) இன்று கொழும்பில் காலமானார்.

பெர்சி அபேசேகர, உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர்.

எதிரணி அணியின் வீரர்களுடன் இவர் நகைச்சுவையான கலந்துரையாடல்களை நடத்துபவராகவும் அறியப்பட்டார். ‘Uncle Percy’ என்றே கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அழைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 87 ஆவது பிறந்தநாளை இவர் கொண்டாடி இருந்ததுடன், அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே இன்று காலமானார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 5 மில்லியன் ரூபாவை பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வழங்கியிருந்தது.

பெர்சி அபேசேகர 1979 உலகக் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணிக்கு ஆதரவாக சர்வதேச போட்டிகளில் இலங்கைக் கொடியை உயர்த்தியவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் குறித்து அரவது குடும்பத்தார் நாளைய தினம் அறிவிக்க உள்ளனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...