ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு பிரேரணை முன்வைப்பு

Date:

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் ‘செனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொடவினால் இந்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பல்வேறு குழுக்களின் விசாரணைகளின் பின்னரும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் விதிமுறைகளுக்கு அமைய 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகரினால் நியமிக்கப்பட வேண்டுமெனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரையும் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கும், எந்தவொரு நபர் மற்றும் ஆவணம் அல்லது பதிவேட்டினை பெறுவதற்கும் அத்தகைய ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மூலமாக பெறுவதற்கும் குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக பரிசீலிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவின் முதலாவது கூட்டத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது பாராளுமன்றம் வழங்கக்கூடிய காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பபடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...