டயானாவுக்கு எதிரான மனு தள்ளுபடி!

Date:

இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

டயான கமகே, பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவும், அமரவும், வாக்களிக்கவும் தகுதியில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹெராத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...