தனது மனைவிக்கு கிடைத்த குழந்தைக்கு “காஸா”என பெயரிட்ட ஊடகவியலாளர்.

Date:

கட்டாரின் அல்காஸ் தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாளராக பணி புரியும் ஹம்மாத் அல் உபைதி தனக்கு கிடைத்த குழந்தைக்கு காஸா எனப் பெயரிட்டு காஸா மீதான தனது ஆழமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்வதால் மனிதாபிமானத்தை நேசிக்கும் உலகெங்கும் உள்ள மக்கள் காஸா மீதான தமது உணர்வை பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹம்மாத்  காஸாவில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த அவர் எப்போது வேண்டுமானாலும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் காரணமாக காஸா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஜுமானாவின் குடும்பத்தினர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிரசவத்திற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த கட்டடம் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.

இது குறித்து அவர் கூறும்போது, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எங்களுக்கு அருகில் இருந்த வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த சத்தம் என்னை நடுங்கச் செய்தது. மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது என்று நினைத்தோம்.

திடீரென மருத்துவமனையில் அனைத்துமே தலைகீழாக மாறியது. எங்கும் சடலங்களும் காயமடைந்தவர்களின் கூக்குரலும், கதறலுமாக இருந்தது. பிரசவ வலி, குண்டுவீச்சு குறித்து சொல்லத் தேவையே இல்லை. எந்தச் சூழலாக இருந்தாலும் குழந்தையைப் பெற்றெடுத்தே தீர வேண்டும் என்பதை மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தேன்,” என்றார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...