10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவை

Date:

10 வருடங்களுக்குப் பின்னர் துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட்  தெரிவித்துள்ளது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும்.

தொடக்க நேரடி விமானம் (TK 730) 261 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அதிகாலை 5.41 மணிக்கு தரையிறங்கியது.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், முதல் நேரடி விமானம் ஏவியேஷன் சர்வீசஸ்சால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

குறித்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் (Ceylon Tea) வழங்கப்பட்டன.

தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நிகழ்வையும் ஏவியேஷன் சர்வீசஸ் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஏவியேஷன் சர்வீசஸ்சின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி,

இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் என்றும், துருக்கிய விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...