சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்?

Date:

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இறுதி முடிவை எடுக்கவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக கட்சி நலன்களுக்கு எதிராக செயற்படுகிறார்.

இது மோசமானது. சில ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், ஆனால் அது எந்த முடிவையும் தரவில்லை. அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக தெரியவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் தம்மைச் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஆர்வமுள்ள தரப்பினரால் சில கதைகள் விதைக்கப்படுகின்றன,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...