சர்வதேச நீர் மாநாட்டின் மதிய உணவுக்காக ரூ9.5 மில்லியன் செலவு!

Date:

நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தினால் சர்வதேச நீர் மாநாட்டின் மதிய உணவுக்காக 9.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, 1,350 பேருக்கு இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், 100 பேருக்கு மதிய உணவு வழங்குவதற்கு 4.4 மில்லியன் ரூபாவை செலவிடுமாறே உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது.

திறைசேரிக்கு எவ்வித மேலதிக செலவும் இன்றி சர்வதேச நீர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை அங்கீகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், இந்த தொகை திறைசேரிக்கு சுமையாக மாறியது.

எவ்வாறாயினும், கடன் பெறுமதியில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...