தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் ஷாப்டரின் மனைவி வாங்கிய காணியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்ததை அடுத்து அதை விசாரித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் இந்த வழங்கு மீதான விசாரணையை நடத்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...