ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழு நியமனம்

Date:

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இடைகால குழுவொன்று நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  குறித்த குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...