இஸ்ரேலிலுள்ள தனது தூதுவரை வெளியேற்றியது ஜோர்டான்!

Date:

காசா மீதான போரை நிறுத்த வலியுறுத்தி வரும் ஜோர்டான், இஸ்ரேலிலுள்ள தனது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரை நிறுத்தி “அது ஏற்படுத்திய மனிதாபிமான நெருக்கடியை” முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தூதுவர் டெல் அவிவ் திரும்புவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியேறிய ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதுவர் அதே நிபந்தனைகளின் பேரில் மட்டுமே திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசா மீதான தாக்குதல்களால் பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாகவும் காசா மீதான அளவில்லாத தாக்குதலாலும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக பொலிவியா நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...